மீண்டும் நடிக்க வருவது எப்போது? -நடிகை ரம்யா

நடிகை ரம்யா
நடிகை ரம்யா

தான் மீண்டும் நடிக்க வருவது எப்போது என்பது பற்றிய தகவலை நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. இவர் தமிழில், பொல்லாதவன், குத்து, வாரணம் ஆயிரம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். நடித்துக் கொண்டிருந்த இவர் திடீரென காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாண்டியா தொகுதி எம்பி ஆனார். பின்னர், திடீரென கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கினார். சமூக வலைதளங்களில் இருந்தும் விலகியே இருந்தார்.

இந்நிலையில், அவர் சினிமாவில் மீண்டும் நடிக்க இருப்பதாக கன்னட திரையுலகில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், அவர் இதுபற்றி எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இப்போது, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் நடிக்க வருவது பற்றித் தெரிவித்துள்ளார்.

அவர் அதில், “நான் மீண்டும் நடிக்க வருவது தொடர்பான உங்கள் ஆர்வங்களையும் யூகங்களையும் புரிந்துகொள்கிறேன். கடந்த சில மாதங்களாக சில சுவாரஸ்யமான கதைகளை கேட்டு வருகிறேன். சிறந்த கதை அமைந்துவிட்டால், அதை நானே அறிவிக்கிறேன். அதுவரை உங்கள் ஆர்வத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in