
நடிகர் ராம்சரண் தன்னுடைய புதிய படமான ‘RC 15’-க்காக நியூஸிலாந்து ஷெட்யூலை முடித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக இந்தப் படத்தின் டைட்டில் ‘RC 15’ என வைக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகி வரக்கூடிய இந்தத் திரைப்படத்தைத் தில் ராஜூ தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் புதிய ஷெட்யூலுக்காக படக்குழு நியூஸிலாந்து சென்றுள்ளது. இயக்குநர் ஷங்கர் இங்குள்ள அழகான தளங்களில் படத்தின் முக்கிய காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டிருந்திருக்கிறார்.
நியூஸிலாந்து படப்பிடிப்புத் தளத்தில் இருந்து ராம்சரணின் ஸ்டைலிஷானப் புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. நியூஸிலாந்தில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் தனித்துவமாகவும் பார்வையாளர்களுக்கு நல்லதொரு காட்சியனுபவமாகவும் இருக்கும். இந்தப் பாடலுக்கு மட்டும் கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.