'குட்மார்னிங் அமெரிக்கா' நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண் பங்கேற்பு: சிரஞ்சீவி நெகிழ்ச்சி

நடிகர்ராம்சரண்
நடிகர்ராம்சரண்'குட்மார்னிங் அமெரிக்கா' நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண் பங்கேற்பு: சிரஞ்சீவி நெகிழ்ச்சி

அமெரிக்காவின் பிரபலமான 'குட்மார்னிங் அமெரிக்கா' நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண் பங்கேற்றது குறித்து நடிகர் சிரஞ்சீவி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் நாட்டு நாட்டு பாடல் சமீபத்தில் ஆஸ்கரில் ‘சிறந்த ஒரிஜினல் பாடல்’ என்ற பிரிவில் விருது வென்றது. மேலும், ‘ஆர்.ஆர்.ஆர் ’ படமும் பல பிரிவுகளில் ஆஸ்கர் பட்டியலில் இடம் பெற்றது.

இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல நிகழ்ச்சியான ‘குட்மார்னிங் அமெரிக்கா’ நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண் கலந்து கொண்டுள்ளார். தென்னிந்திய நடிகர்களில் குறிப்பாக தெலுங்கு நடிகர்களில் முதன்முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் என்ற பெருமை ராம்சரணுக்கு உண்டு. ’ஆர்.ஆர்.ஆர்’ படம், ‘நாட்டு நாட்டு’ உருவான விதம், தான் தந்தையாகி இருப்பது என பல விஷயங்கள் குறித்து இந்த நிகழ்ச்சியில் ராம்சரண் பகிர்ந்துள்ளார்.

நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண்
நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண்'குட்மார்னிங் அமெரிக்கா' நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண் பங்கேற்பு: சிரஞ்சீவி நெகிழ்ச்சி

இதுகுறித்து, ராம்சரணின் தந்தையும், நடிகருமான சிரஞ்சீவி சமூகவலைதளப் பக்கத்தில், " இந்த நிகழ்ச்சியில் ராம்சரண் கலந்து கொண்டது இந்திய மற்றும் தெலுங்கு சினிமாவுக்கு பெருமையானது. ராஜமெளலியின் தொலைநோக்குப் பார்வையில் அனைவரும் இணைந்தபோது அது எப்படியான வெற்றி பெற்றிருக்கிறது. வாழ்த்துகள்! " என பெருமையாக பகிர்ந்துள்ளார். இதற்கு முன்பு ‘குட்மார்னிங் அமெரிக்கா’ நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா பலமுறை கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in