த்ரில்லர் கதைக்களம்: மீண்டும் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் ராமராஜன்!

த்ரில்லர் கதைக்களம்: மீண்டும் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் ராமராஜன்!

திரில்லர் கதைக்களம் கொண்ட படத்தில், நடிகர் ராமராஜன் மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் ஏகப்பட்ட ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் ராமராஜன். நடிப்பது மட்டுமல்லாமல் மண்ணுக்கேத்த பொண்ணு என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குநராகவும் அறிமுகமானார்.

1989 ம் ஆண்டு ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். இப்படம் கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்கும் மேல் திரையரங்கில் ஓடி பல சாதனைகள் படைத்தது. கடந்த பல ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நடிகர் ராமராஜன் தற்போது மீண்டும் திரையுலகில் ஹீரோவாக என்ட்ரி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தம்பிக்கோட்டை படத்தை இயக்கிய அம்மு ரமேஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரில்லர் கதைக்களம் கொண்ட படத்தில், ராமராஜன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in