மீண்டும் மிரட்ட வருகிறார் ராமராஜன்: வெளியானது ‘சாமானியன்’ படத்தின் போஸ்டர்!

மீண்டும் மிரட்ட வருகிறார் ராமராஜன்: வெளியானது ‘சாமானியன்’ படத்தின் போஸ்டர்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் கதாநாயகனாக நடிக்கும் ‘ சாமானியன்’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

80, 90 களின் பிரபல கதாநாயகனாக இருந்தவர் மக்கள் நாயகன் ராமராஜன். கிராமத்து இளைஞர் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திய ராமராஜனின் அப்போதைய படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் நடித்த ‘ கரகாட்டக்காரன்’ திரைப்படம் ஒரு வருடம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. அதுபோல ’எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘எங்க ஊரு காவல்காரன்’ , ‘பாட்டுக்கு நான் அடிமை’ உள்ளிட்ட பல படங்கள் வெள்ளிவிழாவும் கண்டது. சூப்பர் ஸ்டார்களான ரஜினி, கமலுக்கு இணையாக அப்போது ராமராஜனுக்கு வரவேற்பும் இருந்தது. 1985 களில் தொடங்கி 1997 வரை பிஸியாக நடித்த இவர் அதன்பின்னர் அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக 2012ம் ஆண்டும் இவர் நடித்த ‘ மேதை’ திரைப்படம் வெளியானது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் ராமராஜன். ‘சாமானியன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம், எச்செட்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ராகேஷ் இயக்கத்தில் உருவாக இருக்கிறது. ராமராஜனின் 45வது படமான இதில் ராதாரவி , எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் உடன் நடிக்கவுள்ளனர். இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில், ஒரு பான் இந்தியா படமாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இணைந்து ‘சாமானியன்’ படத்தின் போஸ்டரை நேற்று வெளியிட்டுள்ளனர். இதில் மேஜையில் பிரபாகரன் என்ற புத்தகம் உள்ளது போலவும், ராமராஜன் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போலவும், அருகில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் அமர்ந்துள்ளது போலவும் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in