`தி வாரியர்’ படத்தின் புதிய போலீஸ் லுக் போஸ்டர்

தி வாரியர் - ராம் பொத்தினேனி
தி வாரியர் - ராம் பொத்தினேனி

யுகாதி பண்டிகையை ஒட்டி ,’தி வாரியர்’ படத்தின் புதிய போலீஸ் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

விஷால் நடித்த 'சண்டக்கோழி 2' படத்துக்குப் பிறகு ’தி வாரியார்’ என்ற படத்தை என்.லிங்குசாமி இயக்கி வருகிறார். இதில், தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயின். இவர், தெலுங்கில் ‘உப்பெனா’, ‘ஷியாம் சிங்கா ராய்’படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆதி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். அக்‌ஷரா கவுடா உட்பட பலர் நடிக்கின்றனர்.

தி வாரியர் - ராம் பொத்தினேனி
தி வாரியர் - ராம் பொத்தினேனி

தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி - பவன் குமார் தயாரிக்கின்றனர். இந்தப் படம் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, இந்தப் படத்தின் ஹீரோ ராம் பொத்தினேனியின் போலீஸ் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பைக்கில் ஸ்டைலாக ராம் வருவது போன்ற இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in