கவுதம் மேனன் - ராம் இணையும் புதிய படம்: வித்தியாசமான கதைக்களத்துக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!

கவுதம் மேனன் - ராம் இணையும் புதிய படம்: வித்தியாசமான கதைக்களத்துக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!

தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கவிருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனி, சமீபத்தில் லிங்குசாமியின் இயக்கத்தில் ‘தி வாரியர்’ திடைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இந்நிலையில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் புதிய படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார்.

ராம் பொத்தினேனியுடன் புதிய படம் ஒன்றுக்காக அடுத்த வருடம் இணைய இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் உறுதி செய்திருக்கிறார். வித்தியாசமான, ஆர்வமூட்டும் கதைக்களமாக இது இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தயாரிப்பாளர் ஸ்ரவந்தி ரவி கிஷோர் தனக்கும் ராம் பொத்தினேனிக்கும் ஒரு பொது நண்பராக நீண்ட காலமாக இருந்து வருவதையும் கவுதம் மேனன் குறிப்பிட்டுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த கேங்ஸ்டர் படமான ‘வெந்து தணிந்தது காடு’ தெலுங்கில் ஸ்ரவந்தி ரவி கிஷோரின் ஸ்ரவந்தி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் ‘தி லைஃப் ஆஃப் முத்து’ எனும் தலைப்பில் வெளியாகிறது.

கவுதம் மேனன் படங்கள் என்றாலே பொதுவாக ஸ்டைலிஷ், மாடர்ன் த்ரில்லர் கதைகளே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தீவிரமான ஆக்‌ஷன் கதைக்களத்தை சிம்புவுடன் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் கொடுத்திருக்கிறார். சமீபமாக, ராம் பொத்தினேனியும் வழக்கமான மாஸ் ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிப்பதில் இருந்து விலகி வருகிறார். இந்த நிலையில், இருவரது கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் கதைக்களம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.

ராமின் அடுத்த படமான #BoyapatiRapo –ன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. அது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in