நடிகர் சிம்புவை சந்தித்த பிரபல ஹீரோ: இதுதான் காரணமா?

நடிகர் சிம்புவை சந்தித்த பிரபல  ஹீரோ: இதுதான் காரணமா?

நடிகர் சிம்புவை, பிரபல தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி சந்தித்துப் பேசினார்.

'சண்டக்கோழி 2' படத்துக்குப் பிறகு ’தி வாரியர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் லிங்குசாமி . இதில், தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் தமிழுக்கு வருகிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயின். நடிகர் ஆதி வில்லனாக நடிக்கிறார். அக்‌ஷரா கவுடா, நதியா, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி - பவன் குமார் தயாரிக்கின்றனர். வரும் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ’புல்லட்’ பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். அந்தப் பாடல் யூடியூப்பில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், தனது தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் சிம்பு சென்னை திரும்பியுள்ளார். அவரை நடிகர் ராம் பொத்தினேனி சந்தித்துப் பேசினார். அப்போது புல்லட் பாடலை பாடியதற்கு அவருக்கு நன்றித் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in