‘நட்சத்திர விவாகரத்துகள்...’; இயக்குநர் ராம்கோபால் வர்மா ட்வீட்

‘நட்சத்திர விவாகரத்துகள்...’; இயக்குநர் ராம்கோபால் வர்மா ட்வீட்

திருமணத்தின் ஆபத்துகள் பற்றி இளைஞர்களுக்கு எச்சரிக்கும் விதமாக நட்சத்திர விவாகரத்துகள் இருக்கின்றன என பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும், தங்களுடைய 18 ஆண்டு கால திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.

“18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதியாக, பெற்றோராக, நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணத்தில், வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் கட்டத்தில் நிற்கிறோம். பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

இவர்களின் இந்த அறிவிப்பு தமிழ் சினிமா மட்டுமல்லாமல், இந்திய சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ராம்கோபால் வர்மா
இயக்குநர் ராம்கோபால் வர்மா

இந்நிலையில், பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா ‘திருமணத்தின் ஆபத்துகள் பற்றி இளைஞர்களுக்கு எச்சரிக்கும் போக்குகளாக நட்சத்திர விவகாரத்துகள் இருக்கின்றன’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், “திருமணத்தை விட காதலை வேகமாகக் கொலைசெய்ய முடியாது. காதல் இருக்கும்வரை தொடர்ந்து நேசிப்பதும் பிறகு திருமணம் என்கிற சிறைக்குள் போகாமல், இருப்பதே மகிழ்ச்சியின் ரகசியம்” என்றும் கூறியுள்ளார்.

நாகசைதன்யா - சமந்தா திருமணப் பிரிவுக்கு பிறகு, திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பிரிவு தனுஷ்-ஐஸ்வர்யாவினுடையது என்பதால், காதல் திருமணங்கள் குறித்து ராம்கோபால் வர்மா இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in