‘எங்கள் வாரிசு இந்தியாவில்தான் பிறக்கும்’ -ராம்சரண் மனைவி உறுதி

ராம் சரண் - உபாசனா
ராம் சரண் - உபாசனா

தெலுங்கு முன்னணி நடிகரான ராம்சரணின் மனைவி உபாசனா, ‘எங்கள் வாரிசு இந்தியாவில்தான் பிறக்கும்’ என்று உறுதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச விருதுகளை குவித்து வரும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் 2 நாயகர்களில் ஒருவர் ராம்சரண். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான இவர், தந்தையின் இடத்தை நிரப்பும் வகையில் வேகமாக வளர்ந்து வருகிறார். ஆர்ஆர்ஆர் வெற்றி திரைப்படத்தை அடுத்து ஷங்கர் இயக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் இவர் தற்போது நடித்து வருகிறார்.

ராம் சரணின் மனைவி உபாசனா. இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனபோதும் வாரிசு இல்லாதது தொடர்பாக ஒரு சில ஊடகங்களில் வம்பு செய்திகள் வெளியானபோதும், சிரஞ்சீவி குடும்பம் அமைதி காத்தது. கடந்தாண்டு ஜூலையில் ராம் சரண் - உபாசனா தம்பதி தங்களது 10வது திருமண நாளினை கொண்டாடினர். இதனையொட்டி மீண்டும் வாரிசு சர்ச்சை பொதுவெளியில் எழுந்தது. ராம் சரண் வாரிசு தொடர்பாக சிரஞ்சீவி குடும்பத்தில் குழப்பம்; ராம் சரண் - உபாசனா இடையே பிரிவு என்றெல்லாம் ஆதாரமற்ற தகவல்கள் வட்டமடித்தன. அந்த சர்ச்சைகளின் வாயை அடைக்கும் வகையில், கடந்த டிசம்பரில் ராம் சரண் வாரிசு தொடர்பான செய்தியை சிரஞ்சீவி உறுதி செய்தார்.

10 ஆண்டுகளுக்குப் பின்னர் கருவுற்றிருக்கும் உபாசனாவின் பிரசவம் சிக்கலின்றி நடப்பதற்கான ஏற்பாடுகளில் சிரஞ்சீவி குடும்பம் இறங்கியது. இவற்றின் அங்கமாக பிரசவ ஏற்பாட்டுக்காக அமெரிக்க மருத்துவமனையின் உதவியை நாடப்போவதாகவும் செய்திகள் வெளியாயின. அண்மையில் ராம் சரண், ’குட்மார்னிங் அமெரிக்கா’ நிகழ்வில் பங்கேற்ற போதும் அவரது பங்கேற்பு மற்றும் பேட்டியின் அடிப்படையிலும், இந்த ’அமெரிக்க பிரசவம்’ செய்திகள் மீண்டும் வலம் வந்தது.

இதற்கிடையே அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராம் சரண் மனைவி உபாசனா ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், “தாய்நாட்டில் எங்களது முதல் குழந்தையை பெற்றுக் கொள்ள விரும்புகிறோம். உலகத்தரமான மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் அரவணை இங்கேயே கிடைக்கிறது” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in