ஷங்கர் இயக்கும் படத்தில் ஹீரோவுக்கு 3 வேடம்?

ஷங்கர் இயக்கும் படத்தில் ஹீரோவுக்கு 3 வேடம்?

ஷங்கர் இயக்கும் படத்தில் ஹீரோ ராம்சரணுக்கு மூன்று வேடம் என்று செய்தி வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கும் படத்தில், ராம் சரண் நாயகனாக நடித்து வருகிறார். படத்துக்கு தற்காலிகமாக, RC15 என டைட்டில் வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இதில் இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர்.

ராம் சரண்
ராம் சரண்

இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். தமன் இசை அமைக்கிறார். தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் புணே அருகே நடந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்புகள், ராஜமுந்திரி, காக்கிநாடா, மேற்கு கோதாவரி, அமிர்தசரஸ், விசாகப்பட்டினத்தில் நடந்து வந்தது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது ராம்சரணின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலானது.

இந்நிலையில், இந்தப் படத்தில் ராம் சரண் மூன்று வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்பா, இரண்டு மகன்கள் என நடிப்பதாகவும் மகன்களில் ஒருவர் வில்லத்தனமான கேரக்டரில் வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in