‘நாட்டு நாட்டு’ இனி ஒட்டுமொத்த உலகத்துக்கானது -ராம் சரண் பெருமிதம்!

இயக்குநர் ராஜமவுலி மற்றும் ஜூனியர் என்டிஆருடன், ஆஸ்கர் விழாவில் ராம் சரண்
இயக்குநர் ராஜமவுலி மற்றும் ஜூனியர் என்டிஆருடன், ஆஸ்கர் விழாவில் ராம் சரண்

ஆஸ்கர் விருது பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல், இனி அதனை ஏற்றுக்கொண்ட ஒட்டுமொத்த உலகத்துக்குமானது, என பெருமிதம் தெரிவித்திருக்கிறார் நடிகர் ராம் சரண்.

’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் நாயகர்களில் ஒருவராகவும், ’நாட்டு நாட்டு’ பாடலில் ஜூனியர் என்டிஆருடன் சேர்ந்து ஆட்டத்தில் பட்டையை கிளப்பியவருமான ராம் சரண், ஆஸ்கர் விருது மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார். ஆர்ஆர்ஆர் படக்குழுவினருடன் ஆஸ்கர் மேடையை அலங்கரித்த ராம் சரண், விருது மகிழ்விலிருந்து விடுபடாத சாமானிய இந்தியர்களில் ஒருவராகவே நீடிக்கிறார்.

"இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, 'நாட்டு நாட்டு' படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட 'ஆர்ஆர்ஆர்' குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். பாடலை சிறப்பாக பாடிய ராகுல் சிபில்கஞ்ச் மற்றும் காலபைரவா, நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் மற்றும் இந்த பாடலுக்கு உயிர்கொடுத்த அனைவருக்கும் பாராட்டுகள்.

'நாட்டு நாட்டு' பாடல் ஒரு உலகளாவிய கொண்டாட்டமாக மாறியுள்ளது. சிறந்த கதை மற்றும் சிறந்த பாடல் மொழி மற்றும் எல்லைகளை கடந்து வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது. இந்தப் பாடல் இனி எங்களின் பாடல் அல்ல, 'நாட்டு நாட்டு' இனி பொதுமக்களுக்கும், அதை ஏற்றுக்கொண்ட அனைத்து வயது மற்றும் கலாச்சாரங்களை சேர்ந்தவர்களுக்கும் சொந்தமானது. இந்தியாவிற்கு இது ஒரு சிறந்த தருணம்!" என்று மனமார்ந்து வாழ்த்தி இருக்கிறார் ராம் சரண்.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனாக சினிமாவில் காலடி வைத்த ராம் சரணுக்கு, தொடக்கத்தில் வாரிசு பிரபலம் என்பது பின்னடைவையே தந்தது. தன்னுடைய தனித்திறமையை நிரூபித்து சினிமாவில் நிலைக்க அவர் வெகுவாய் போராட வேண்டியிருந்தது. தற்போது ஆர்ஆர்ஆர் வெற்றி மூலம் கிடைத்திருக்கும் வெளிச்சம், ராம் சரண் கடந்து வந்த போராட்டங்களின் வலியை துடைத்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in