`இப்போது வரை கனவில்தான் இருக்கிறேன்'- ஆஸ்கர் விருது வென்றது குறித்து ராம்சரண் நெகிழ்ச்சி!

 ராம்சரண்
ராம்சரண் `இப்போது வரை கனவில்தான் இருக்கிறேன்'- ஆஸ்கர் விருது வென்றது குறித்து ராம்சரண் நெகிழ்ச்சி!

நடிகர் ராம்சரண் ஆஸ்கர் விருது வென்றது பற்றி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ராஜமெளலி இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அலியாபட் உள்ளிட்டப் பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. கடந்த வருடம் வெளியான இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. மேலும், இந்த வருடத்தின் 95-வது ஆஸ்கர் விருதுக்கும், கோல்டன் குளோப் விருதுக்கும் இந்தப் படம் அனுப்பப்பட்டது. இதில் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதினை இன்று வென்றது. இந்த விருதினை இதன் இசையமைப்பாளரான கீரவாணி பெற்றுக் கொண்டார்.

ஆஸ்கர் விருது வென்றது பற்றி ராம்சரண் பகிர்ந்திருப்பதாவது, ‘இந்திய சினிமா வரலாற்றிலும் எங்களுக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் எப்போதுமே ஸ்பெஷலான படம். ஆஸ்கர் விருது வரை அழைத்து சென்ற அனைவருக்கும் நன்றி. விருது வென்ற பிறகும் இப்போது வரை நான் கனவில்தான் இருக்கிறேன். இந்திய சினிமாவின் ஜெம் என ராஜமெளலி சாரையும், கீரவாணி சாரையும் குறிப்பிடுவேன். இதுபோன்ற ஒரு மாஸ்டர்பீஸ் படத்தில் எனக்கும் வாய்ப்பளித்த இந்த இருவருக்கும் நன்றி. இப்போது, உலக அளவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஒரு எமோஷனாக மாறி உள்ளது. பாடல் எழுதிய சந்திரபோஸ் சார், பாடகர்கள் ராகுல், கால பைரவா மற்றும் நடன அமைப்பாளர் பிரேம் ரக்‌ஷித் ஆகியோருக்கும் இந்தப் படத்தில் என்னுடன் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த விருது அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சமர்ப்பிக்கிறோம். இது நம் நாட்டின் வெற்றி!’ என பகிர்ந்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in