ஆர்ஆர்ஆர் `நாட்டுக் கூத்து’ வீடியோ பாடல் வெளியீடு

ஆர்ஆர்ஆர் `நாட்டுக் கூத்து’ வீடியோ பாடல் வெளியீடு

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் ’நாட்டுக் கூத்து’ முழு வீடியோ பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான படம், ’ஆர்ஆர்ஆர்’. ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், அஜய்தேவ்கன், ஆலியா பட் உட்பட பலர் நடித்த இந்த பான் இந்தியா படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தானய்யா தயாரித்த இந்தப் படத்துக்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மரகதமணி இசை அமைத்துள்ளார்.

படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலை இந்தப் படம் கடந்தது. மூன்றே நாட்களில் ரூ.500 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. இந்தப் படம் வட இந்தியாவிலும் தொடர்ந்து வசூல் ஈட்டி வருகிறது. ஆயிரம் கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் உலகம் முழுவதும் எட்டியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ’நாட்டுக் கூத்து’ என்ற பாடலின் முழு வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. படம் வெளியானபோது இந்த பாடலும் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆரின் வேகமாக நடனமும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த பாடலுக்கான நடனத்தை நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித் அமைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in