மொழிவாரியாக படங்களைப் பிரித்து பார்க்காதீர்கள்: வேண்டுகோள் விடும் நடிகை ரகுல் ப்ரீத்சிங்

நடிகை ரகுல் பிரீத் சிங்
நடிகை ரகுல் பிரீத் சிங்மொழிவாரியாக படங்களைப் பிரித்து பார்க்காதீர்கள்: வேண்டுகோள் விடும் நடிகை ரகுல் ப்ரீத்சிங்

'தடையற தாக்க' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத்சிங். பிறகு 'தீரன் அதிகாரம் ஒன்று', ‘தேவ்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது, 'இந்தியன் 2', 'அயலான்' ஆகிய படங்கள் அவர் நடித்து வெளிவர உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், படங்களை மொழிவாரியாக பிரித்து ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "தென்னிந்திய மொழி படங்கள் பல இந்தி சேனல்களிலும் திரையரங்குகளிலும் ஒளிபரப்பாகும் போது அங்கிருக்கும் சினிமா ரசிகர்களைப் பரவலாக சென்றடைகிறது. நல்ல கதையம்சம் கொண்ட பல படங்கள் நல்ல வரவேற்பு பெற்று அங்கு கொண்டாடவும் படுகிறது. இந்தி மற்றும் பிற பிராந்திய மொழி படங்கள் அனைத்தும் இந்திய சினிமாவின் ஒரு பகுதியே. இதை பிரித்துப் பார்த்து ஒப்பிட வேண்டாம். நல்ல படங்கள் என்பது எந்த மொழியில் வெளியானாலும் அதற்கான பார்வையாளர்களைச் சென்றடையும். சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் ஒவ்வொருவரும் படம் குறித்தான தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பல சமயங்களில் இது விவாதங்களுக்கு வழிவகுத்து செல்கிறது. நம்மிடம் திறமையான பல கலைஞர்கள், நல்ல படைப்பாளிகள், நடிகர்கள் உள்ளனர். அவர்களை வைத்து சர்வதேச திரைப்படங்களை உருவாக்க முடியும். அதனால், படங்களை மொழிவாரியாக பிரித்து பார்க்க வேண்டாம்" என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in