குரு கோவிந்த் சிங் ஜெயந்தி: குருத்வாராவில் வழிபட்டார் நடிகை ரகுல்!

ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்

சீக்கிய மதக்குருவான குரு கோவிந்த் சிங் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நடிகை ரகுல் பிரீத் சிங், குருத்வாராவில் வழிபட்டார்.

தெலுங்கில் பிரபலமான ரகுல் பிரீத் சிங், அருண் விஜய் நடித்த ’தடையறத் தாக்க’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். தொடர்ந்து ’புத்தகம்’, ’என்னமோ ஏதோ’, ’தீரன் அதிகாரம் ஒன்று’, ‘ஸ்பைடர்’ உளிட்ட சில படங்களில் நடித்தார். வெளியீட்டுக்கு காத்திருக்கும் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ திரைப்படத்திலும் உடன் நடித்துள்ளார்.

குருத்வாராவில் ரகுல் ப்ரீத் சிங்
குருத்வாராவில் ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங், நடிகரும் தயாரிப்பாளருமான ஜக்கி பாக்னானியை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக வந்த தகவலை ரகுல் அண்மையில் மறுத்திருந்தார். ‘காதலை வெளிப்படையாக தெரிவித்த நான், திருமணத்தை ஏன் மறைக்க வேண்டும். அப்படி நடக்கும்போது வெளிப்படையாக அறிவிப்பேன்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், 10வது சீக்கிய மதக்குருவான குரு கோவிந்த் சிங் ஜெயந்தி தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, நடிகை ரகுல் பிரீத் சிங் குருத்வாராவுக்கு சென்று வழிபட்டார். அவர் குருத்வாராவுக்கு செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in