காதலனை அறிமுகப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங்

காதலனை அறிமுகப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங்

‘இந்தியன்-2’, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘அயலான்’ ஆகிய படங்களில் நடித்துவரும் ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக அறியப்படுபவர்.

இன்று (அக்டோபர் 10) தன் பிறந்தநாளைக் கொண்டாடும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தன் பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். பாலிவுட்டில் நடிகர், தயாரிப்பாளராக இயங்கிவரும் ஜாக்கி பாக்நானியுடன் இருக்கும் புகைபடத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ரகுல் ப்ரீத் சிங், ‛நன்றி அன்பே!! இந்த ஆண்டு நீ எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு. என் வாழ்க்கையில் வண்ணத்தைச் சேர்த்த உனக்கு என்னுடைய நன்றி. என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கு நன்றி. நீ நீயாக இருப்பதற்கு நன்றி. இன்னும் ஒன்றாகச் சேர்ந்து அதிக நினைவுகளை உருவாக்குவதற்கு...' எனப் பதிவிட்டு தனது காதலரை அறிமுகப்படுத்தினார்.

அதேபோல், ஜாக்கி பாக்நானி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ரகுல் ப்ரீத் சிங்கிற்கு உருக்கமாக வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in