'இந்தியன் 2’ ஷூட்டிங்கில் இணைந்தார் பிரபல ஹீரோயின்!

'இந்தியன் 2’ ஷூட்டிங்கில் இணைந்தார் பிரபல ஹீரோயின்!

’இந்தியன் 2’ படப்பிடிப்பில் பிரபல ஹீரோயின் இன்று முதல் இணைந்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு, கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பல்வேறு காரணங்களால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பிறகு நடிகர் கமல்ஹாசன், விக்ரம் படத்திலும் இயக்குநர் ஷங்கர், ராம் சரண் நடிக்கும் படத்திலும் கவனம் செலுத்தினர். 'விக்ரம்' மெகா ஹிட்டுக்கு பிறகு, ’இந்தியன்-2’படத்தைத் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் படத்தை உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவிஸும் இணைந்து தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இதன் படப்பிடிப்பு கடந்த 25-ம் தேதி சென்னையில் தொடங்கியது. கமல்ஹாசன் அமெரிக்காவில் இருப்பதால் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தின் ரகுல் பிரீத் சிங் இப்போது இணைந்துள்ளார். அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. நடிகை காஜல் அகர்வால் செப்டம்பர் 13-ம் தேதி படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in