ஜக்கி வாசுதேவுடன் கோல்ஃப் விளையாடிய பிரபல ஹீரோயின்!

ஜக்கி வாசுதேவுடன் கோல்ஃப் விளையாடிய பிரபல ஹீரோயின்!

ஜக்கி வாசுதேவுடன் பிரபல நடிகை கோல்ஃப் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். தமிழில், ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர், நடிகரும் தயாரிப்பாளருமான ஜேக்கி பக்னானியை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வந்த தகவலை அவர் மறுத்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள நடிகை ரகுல் பிரீத் சிங், அங்கு ஜக்கி வாசுதேவ், கபில்தேவ் ஆகியோருடன் கோல்ஃப் விளையாடும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், வாஷிங்டன் டிசியில் கபில்தேவ், சத்குருவுடன் ஏடிஏ (அமெரிக்க தெலுங்கு சங்கம்) மாநாட்டை தொடங்கி வைப்பதை விட சிறந்தது என்ன இருக்கிறது? என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in