சூப்பர் ஹிட் படத்தின் இந்தி ரீமேக்கில் ரகுல்!

நடிகை ரகுல் பிரீத் சிங்
நடிகை ரகுல் பிரீத் சிங்

தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ’ராட்சசன்’ பட இந்தி ரீமேக்கில், ரகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்கிறார்.

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால், சூசன் ஜார்ஜ், காளிவெங்கட், சரவணன், ராம்தாஸ், வினோதினி உட்பட பலர் நடித்து வெற்றிபெற்ற திரைப்படம் ’ராட்சசன்’. பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது.

இதையடுத்து, இந்தப் படம் தெலுங்கில் ராக்‌ஷசுடு என்ற பெயரில் 2019-ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. பெல்லங்கொண்டா ஸ்ரீனிவாஸ், அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தனர். ரமேஷ் வர்மா இயக்கி இருந்த இந்தப் படம், அங்கும் வரவேற்பைப் பெற்றது.

ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்

இந்நிலையில், இப்படம் இப்போது இந்தியிலும் ரீமேக் ஆகிறது. அங்கு அக்‌ஷய்குமார் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார்.

சைக்கோ த்ரில்லர் படமான இதன் ஷூட்டிங் முசோரியில் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை ரஞ்சித் திவாரி இயக்குகிறார். பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

முசோரியில் இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கும் நடிகர் அக்‌ஷய் குமார், அங்கு பனிபொழியும் சூழலை ரசிப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in