அடுக்கடுக்கான புகார்கள்: புதுக் கணவன் கைதுக்கு காரணமான ராக்கி சாவந்த்

கணவருடன் ராக்கி சாவந்த்
கணவருடன் ராக்கி சாவந்த்

பணமோசடி முதல் தாயின் சாவுக்கு காரணம் வரை, அடுக்கடுக்கான புகார்களை சுமத்தியதில் நடிகை ராக்கி சாவந்த் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட்டின் பரபரப்பு நாயகியரில் ராக்கி சாவந்தும் ஒருவர். இவர் அடில் கான் என்பவரை ரகசியமாக கடந்தாண்டு திருமணம் செய்திருந்தார். அதனை கடந்த மாதம்தான் பொதுவெளியில் தெரிவித்தார். அடுத்த சில நாட்களிலேயே, கணவனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக புகார் வாசித்தவர், இன்று அவருக்கு போலீஸ் புகார் மூலம் காப்பு கட்டியுள்ளார்.

திரையில் நடிப்பதற்கு வாய்ப்புகள் இழந்த நிலையில், பொதுவெளியில் பரபரப்பை ஏற்படுத்துவதன் மூலமே தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வதை உபாயமாக கொண்டிருப்பவர் ராக்கி சாவந்த். இவர் நேற்று மும்பை போலீஸில் அளித்த புகார்களை அடுத்து, இன்று இவரது கணவர் அடில் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தான் கணவர் என்ற தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்ட 24 மணி நேரத்தில், அவருக்கு இதர பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று புகார் கிளப்பியவர் சாக்கி சாவந்த். தற்போது அடில் கானுக்கு எதிராக தன்னுடைய பணத்தை மோசடி செய்ததாகவும், தங்க நகைகளை முறைகேடாக அபகரித்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.

அவற்றில் உச்சமாக, ’தான் மராத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது தாயை தவிக்கவிட்டதாகவும், அறுவை சிகிச்சை உரிய நேரத்தில் பணத்தை கட்டாததால் தாய் உயிரிழக்க காரணமானதாகவும்’ அடில் கானுக்கு எதிராக புகார்களை அடுக்கியுள்ளார் ராக்கி சாவந்த்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in