பிரபல சர்ச்சை நடிகைக்கு பி.எம்.டபிள்யூ பரிசளித்த நண்பர்கள்

பிரபல சர்ச்சை நடிகைக்கு பி.எம்.டபிள்யூ பரிசளித்த நண்பர்கள்

பிரபல சர்ச்சை நடிகைக்கு அவர் நண்பர்கள் பி.எம்.டபிள்யூ காரை பரிசாக அளித்துள்ளனர்.

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். தமிழில், என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். அடிக்கடி சர்ச்சை கருத்துக்களையும் வெளியிட்டு பிரபலமானவர் இவர். தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை இவர் ரகசிய திருமணம் செய்திருந்தார். இதை இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார். பின்னர் இருவரும் திடீரென பிரிந்தனர். அதையும் சமூக வலைதளம் மூலம் அறிவித்தார்.

ராக்கி சாவந்த், அடில், ஷெல்லி லதெர்
ராக்கி சாவந்த், அடில், ஷெல்லி லதெர்

இந்நிலையில், அவருக்கு அவருடைய நண்பர்கள் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 1 கரை பரிசாக அளித்துள்ளனர். இதன் விலை ரூ.50 லட்சம். இதுபற்றி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகை ராக்கி சாவந்த், அந்த காரில் கேக் வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நண்பர்கள் அடில் மற்றும் ஷெல்லி லதெர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், சல்மான் கான் போல தன்னிடம் கார் வாங்க வசதியில்லை என்று நடிகை ராக்கி கூறியிருந்தார். பின்னர் அவர் ஒரு கார் ஷோரூமின் வெளியே நின்றிருந்தார். அப்போது கார் வாங்க வந்தீர்களா? என்று கேட்டனர். அதற்கு, என் ஸ்விஃப்ட் காரே போதுமானது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் நண்பர்கள் அவருக்கு பி.எம்.டபிள்யூ காரை பரிசளித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in