`நான் வாங்கிக் கொடுத்த கார், வெட்கமே கிடையாது’: நடிகையை விளாசும் முன்னாள் கணவர்

`நான் வாங்கிக் கொடுத்த கார், வெட்கமே கிடையாது’: நடிகையை விளாசும் முன்னாள் கணவர்
ரிதேஷ், நடிகை ராக்கி சாவந்த்

முன்னாள் கணவர் மீது பிரபல நடிகை கூறிய புகாருக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். தமிழில், 'என் சகியே', 'முத்திரை' படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அடிக்கடி சர்ச்சைக் கருத்துகளை வெளியிட்டு பிரபலமானவர் இவர். தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை ரகசியத் திருமணம் செய்திருந்த ராக்கி சாவந்த், அதை இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் கணவரைப் பிரிந்துவிட்டதாக அறிவித்தார்.

பின்னர், அடில் கான் துர்ரானி என்ற தொழிலதிபரைக் காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக மும்பையில் வசித்து வருகின்றனர். நடிகை ராக்கிக்குப் புதிய பிஎம்டபிள்யூ காரை துர்ரானி பரிசளித்துள்ளார். துபாயில், அவர் பெயரில் ஒரு வீட்டையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் நடிகை ராக்கி சாவந்த், தனது முன்னாள் கணவர் ரிதேஷ் மீது மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை ராக்கி சாவந்த், அடில் கான்
நடிகை ராக்கி சாவந்த், அடில் கான்

அப்போது ‘என் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட என் சமூகவலைதளக் கணக்குகளை ரிதேஷ் கையாண்டார். என் ஜிமெயில், கூகுள் பே, பேடிஎம் கணக்குகளையும் அவர்தான் பார்த்துக்கொண்டார். நாங்கள் பிரிந்தபின், அந்தக் கணக்குகளின் பாஸ்வேர்டை நான் மாற்றவில்லை. ரிதேஷ் அதை மாற்றி அனைத்துக் கணக்குகளிலும் அவர் பெயரையும் போன் நம்பரையும் சேர்த்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதித்து வந்தேன். அதை அவர் ஹேக் செய்துவிட்டார்’ என்று கண்ணீருடன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிலையில் ராக்கி சாவந்தின் புகார் குறித்து, அவர் முன்னாள் கணவர் ரிதேஷ் கூறுகையில், ``ராக்கி சாவந்த் கூறிய அனைத்தும் பொய். கடந்த 3 வருடங்களாக அவர் என்னை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். அவரிடம் காரோ, பொருட்களோ எதுவும் கிடையாது. அவர் வீட்டில் இருக்கும் அனைத்தும் நான் வாங்கியது. பல கோடி ரூபாய்களை அவளுக்காக செலவு செய்திருக்கிறேன். வெட்கமற்றவர். என்னை விட்டுவிட்டு வேறொரு பையனுடன் வாழ்ந்து வருகிறார். என்னைக் களங்கப்படுத்த அவர் என் மீது மேலும் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தலாம். நான் அவளிடம் இருந்து வெகு தொலைவில், மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் குற்றச்சாட்டுகளுக்கு சட்டப்படி பதிலளிப்பேன்'' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in