`என் காதலர் இதைத்தான் விரும்புகிறார்'- சொல்கிறார் பிரபல நடிகை

`என் காதலர் இதைத்தான் விரும்புகிறார்'- சொல்கிறார் பிரபல நடிகை

கவர்ச்சிக் குறைவான உடைகளையே, தான் அணிய வேண்டும் என்று தனது காதலர் குடும்பம் விரும்புவதாக நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். தமிழில், 'என் சகியே', 'முத்திரை' ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும் வெளியிட்டு பிரபலமானவர் இவர். தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை ரகசியத் திருமணம் செய்திருந்த இவர், அவரை பிரிந்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.

பின்னர், அடில் கான் துர்ரானி என்பவரைக் காதலித்து வருவதாக சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். அவர், ராக்கிக்கு புதிய பிஎம்டபிள்யூ காரை பரிசளித்துள்ளார். துபாயில் அவர் பெயரில் ஒரு வீட்டையும் வாங்கியுள்ளார். ராக்கியை, துபாய் அழைத்துச் சென்றிருந்த அடில், குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார்.

’ஒருவர், தனது காதலியை குடும்பத்திற்கு அறிமுகப்படுத்துவது பெரும்பாலும் இல்லை. அடில் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் தனது குடும்பத்தில் எதிர்ப்பு இருப்பதாகவும் ஒப்புக் கொண்டார். அவர்கள், கவர்ச்சி குறைவான, உடலை மூடிய உடைகளையே, நான் அணிய வேண்டும் என விரும்புகின்றனர். எனது கடந்த காலம் பற்றி அவரிடம் கூறியதற்காகப் பாராட்டினார்’ என்று ராக்கி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in