`அழிப்பது கஷ்டம், யார் பெயரையும் டாட்டூ குத்தாதீங்க’- சர்ச்சை நடிகை திடீர் அட்வைஸ்!

`
`அழிப்பது கஷ்டம், யார் பெயரையும் டாட்டூ குத்தாதீங்க’- சர்ச்சை நடிகை திடீர் அட்வைஸ்!

``யார் பெயரையும் உடலில் பச்சைக்குத்திக் கொள்ளாதீர்கள்'' என்று பிரபல சர்ச்சை நடிகை அட்வைஸ் செய்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். தமிழில், என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு பிரபலமானவர் இவர். தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை இவர் 2019-ம் ஆண்டு ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதை இந்தி பிக்பாஸ் 14 நிகழ்ச்சியில் அறிவித்தார்.

ரிதேஷ், ஏற்கெனவே திருமணம் ஆனவர். இந்நிலையில் நடிகை ராக்கி சாவந்த், ரிதேஷை திடீரென பிரிந்தார். அதை சமூக வலைதளம் மூலம் அறிவித்தார். இருவரும் காதலித்தபோது ரிதேஷ் பெயரை, ராக்கி சாவந்த் தனது இடுப்புக்கு மேல் பச்சைக் குத்தியிருந்தார். அதை இப்போது நீக்கியுள்ளார். இதற்காக டாட்டூ ஸ்டூடியோவுக்கு சென்ற அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உடலில் குத்தப்பட்டிருந்த ரிதேஷின் பெயரை, டாட்டூ கலைஞர் அழிக்கிறார்.

இதுபற்றி நடிகை ராக்கி கூறும்போது, ``திருமணம் முடிந்து மூன்று வருடத்துக்குப் பிறகு ரிதேஷ் என் வாழ்க்கையில் இருந்து பிரிந்துவிட்டார். இப்போது என் உடலில் இருந்தும் பிரிந்துவிட்டார். அவரை அதிகமாக காதலித்ததால் அவர் பெயரைப் பச்சைக் குத்திக்கொண்டேன். இப்போது அதை அழிப்பது கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் யாரும், யார் பெயரையும் பச்சைக்குத்திக் கொள்ள வேண்டாம்’' என்று தெரிவித்துள்ளார்.

நடிகை ராக்கியின் இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் ரசிகர்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in