’இவர்தான் என் பாய்ஃபிரண்ட்’ - புதிய காதலருக்கு நன்றி சொன்ன பிக் பாஸ் நடிகை

’இவர்தான் என் பாய்ஃபிரண்ட்’ - புதிய காதலருக்கு நன்றி சொன்ன பிக் பாஸ் நடிகை

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். தமிழில், 'என் சகியே', 'முத்திரை' ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும் வெளியிட்டு பிரபலமானவர் இவர். தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை ரகசியத் திருமணம் செய்திருந்தார். இதை, இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, அறிவித்தார். பின்னர் இருவரும் திடீரென பிரிந்தனர். அதை சமூக வலைதளம் மூலம் ராக்கி சாவந்த் அறிவித்தார்.

அடில் கான் துர்ரானியுடன் ராக்கி சாவந்த்
அடில் கான் துர்ரானியுடன் ராக்கி சாவந்த்

இந்நிலையில், ராக்கி சாவந்துக்கு அவருடைய நண்பர்கள் ‘பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1’ காரை கடந்த மாதம் பரிசாக அளித்தனர். அதன் விலை 50 லட்சம் ரூபாய். இதுபற்றி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகை ராக்கி சாவந்த், அந்த காரில் கேக் வெட்டும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், நண்பர்கள் அடில் கான் துர்ரானி மற்றும் ஷெல்லி லதெர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அடில் கான் துர்ரானியைக் காதலித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராக்கி, தனது காதலருக்கு வீடியோ காலில் பேசி அதை அங்கிருந்த புகைப்படக் கலைஞர்களுக்குக் காண்பித்தார். ‘இவர்தான் என் பாய்ஃபிரண்ட், அடில். அவருக்கு நன்றி’ என்றார். பின்னர், அவருக்கு வீடியோ காலிலேயே முத்தம் கொடுத்தார்.

ராக்கி பற்றி அடிலிடம் கேட்டபோது, ’அவர் இனிமையானவர்’ என்றார். இந்த வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் ராக்கி சாவந்த் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in