காதலர் தினத்தில் கணவரைப் பிரிந்த பிரபல நடிகை

நடிகை ராக்கி சாவந்த்
நடிகை ராக்கி சாவந்த்

பிரபல நடிகை ராக்கி சாவந்த், தனது கணவரைப் பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில், என் சகியே, முத்திரை படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வரும் இவர், தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார். ரிதேஷ், வெளிநாட்டில் வசித்து வருவதாக அவர் தெரிவித்து இருந்தார்.

ராக்கி சாவந்த் - ரிதேஷ்
ராக்கி சாவந்த் - ரிதேஷ்

இந்நிலையில் இந்தி ‘பிக் பாஸ் 14’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ராக்கி சாவந்த், அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது கணவர் ரிதேஷை அறிமுகப்படுத்தினார். ரிதேஷ், ஏற்கெனவே திருமணம் ஆனவர். சமீபத்தில் தனது திருமணம் சட்டப்படி நடக்கவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, ரிதேஷின் முதல் மனைவி ஸ்னிக்தா பிரியா, அவர் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அதற்கு பதிலளித்த ராக்கி, தனது கணவர் ரிதேஷ் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும் அவர் அன்பானவர், பாசமானவர் என்றும் புகழ்ந்து கூறியிருந்தார்.

 ரிதேஷ்  - ராக்கி
ரிதேஷ் - ராக்கி

இந்நிலையில், இப்போது தனது கணவர் ரிதேஷை பிரிந்துவிட்டதாக ராக்கி தெரிவித்துள்ளார். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ராக்கி, ’‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு எங்கள் கட்டுப்பாட்டை மீறி பல நிகழ்ச்சிகள் நடந்துவிட்டன. எங்கள் வேறுபாடுகளை சரிசெய்ய முயன்றோம். முடியவில்லை. பிறகு நாங்கள் இணக்கமாகப் பிரிவதுதான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்தேன். காதலர் தினத்துக்கு முன் இப்படியொரு முடிவு எடுத்தது வருத்தமாகத்தான் இருக்கிறது. என்னை புரிந்துகொண்டு ஆதரவளித்த ரிதேஷுக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in