'நாட்டை விற்பதை ஒத்துக் கொள்ளுங்கள்':மோடியை விமர்சிக்கும் பிரகாஷ்ராஜ்!

'நாட்டை விற்பதை ஒத்துக் கொள்ளுங்கள்':மோடியை விமர்சிக்கும் பிரகாஷ்ராஜ்!

"பிரதமர் மோடி டீ விற்றதை நம்பியவர்கள், அவர் நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள்" என்று நடிகர் பிரகாஷ்ராஜ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தயாரிப்பாளர், இயக்குநர் என்பது உள்ளிட்ட பன்முகத்திறமை கொண்ட பிரகாஷ்ராஜ், எழுத்தாளரும், அவரது தோழியுமான கெளரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து இந்துத்துவா அமைப்பினருக்கு எதிராக தனது குரலை கடுமையாகப் பதிவு செய்து வருகிறார். மத்திய பாஜக அரசின் மீதும் விமர்சனங்களையும் முன் வைத்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து ஒரு பதிவை இன்று வெளியிட்டுள்ளார்.அதில், "பிரதமர் மோடி டீ விற்றதை நம்பியவர்கள், அவர் நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.