பிரபல நடிகரின் பான் கார்டை பயன்படுத்தி மோசடி

பிரபல நடிகரின் பான் கார்டை பயன்படுத்தி மோசடி
ராஜ்குமார் ராவ்

தனது பான் கார்டை பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பிரபல இந்தி நடிகர் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ். இவர் இந்தியில் கேங்ஸ் ஆஃப் வாஸிபூர் 2, கை போ சே, குயின், மேட் இன் சைனா, பதாய் தோ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருடைய பான் கார்டை பயன்படுத்தி யாரோ மோசடியாக கடன்பெற்றுள்ளனர். இதுபற்றி நடிகர் ராஜ்குமார் ராவ் புகார் கொடுத்துள்ளார்.

ராஜ்குமார் ராவ்
ராஜ்குமார் ராவ்

இந்த மோசடி குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள ராஜ்குமார் ராவ், ’எனது பான் கார்டை தவறாகப் பயன்படுத்தி, என் பெயரில் சிறிய தொகையான ரூ.2500 கடனாகப் பெறப்பட்டுள்ளது. இதனால் என சிபில் ஸ்கோர் (cibil score) பாதிக்கப்பட்டுள்ளது. சிபில் அதிகாரிகள் இதை சரி செய்து, மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி cibil அதிகாரிகளுக்கும் அவர் டேக் செய்துள்ளார். ஆனால், அவர்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை.

Related Stories

No stories found.