திரையரங்கில் ரஜினியின் பிறந்த நாள் விழா: கேக் வெட்டி ரசிகர்களுடன் கொண்டாடிய லதா ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கேக் வெட்டி ரசிகர்களுடன் கொண்டாடியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 72-வது பிறந்தநாளை டிச.12-ம் தேதி கொண்டாட உள்ளார். இதனையொட்டி 'பாபா' திரைப்படம் இன்று மறு வெளியீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் சிறப்பு திரையிடல் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்டப் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட லதா ரஜினிகாந்த் திரையரங்கில் உள்ள பால்கனியில் கேக் வெட்டி ரஜினிகாந்தின் பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பாபா’ திரைப்படம் மட்டுமல்லாது, ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘சிவாஜி’ திரைப்படமும் சென்னையில் உள்ள பிவிஆர் மற்றும் சினிபொலிஸ் ஆகிய திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in