'மிஸ் மார்வல்' வெப் தொடரில் ரஜினியின் 'லிங்கா' பட பாடல் இடம் பெற்றுள்ளது.
மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார். இந்த சூப்பர் ஹீரோ கதைகள் சினிமாவாக மட்டுமின்றி வெப் தொடராகவும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ’மிஸ் மார்வெல்’ என்ற சூப்பர் ஹீரோ காமெடி வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
பிஷா.கே அலி இயக்கியுள்ள இந்த தொடரில், பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட இமான் வெல்லனி (Iman Vellani), மிஸ் மார்வெலாக நடித்துள்ளார். மாட் லின்ட்ஸ், யாஷ்மின் ஃபிளட்சர், ஜெனோபியா ஷெராப், மோகன் கபூர் உட்பட பலர் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் உட்பட சிலர் சிறப்பு தோற்றத் தில் நடித்துள்ளார்.
வாரம் ஒரு எபிசோடாக வெளியாகும் இதன் முதல் எபிசோட் கடந்த புதன்கிழமை (ஜூன் 8) வெளியானது. இதில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'லிங்கா' படத்தில் இடம்பெறும் ஓ நண்பா என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல் இது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.