
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் `ஜெயிலர்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'ஜெயிலர்'. நெல்சன் இயக்கத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகை தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகி வருகிறது.
இந்த நிலையில், `ஜெயிலர்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. தெலுங்கு நடிகர் சுனில் கதாபாத்திரத்துடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ஜெயிலர் படக்குழு. இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.