ரஜினியின் `ஜெயிலர்’ பட ஷூட்டிங் எப்போது?

ரஜினியின் `ஜெயிலர்’ பட ஷூட்டிங் எப்போது?

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் எங்கு, எப்போது தொடங்குகிறது என்பது தெரியவந்துள்ளது.

ரஜினி நடித்த ’அண்ணாத்த’ படம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. சிவா இயக்கிய இந்தப் படத்தில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உட்பட பலர் நடித்திருந்தனர். டி.இமான் இசை அமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம், ரஜினிகாந்தின் 168-வது படம் ஆகும். இதையடுத்து அவரின் 169-வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

’ஜெயிலர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இதில் ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதாகவும் இருவரும் கணவன்- மனைவியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இதில் பிளாஷ்பேக் காட்சியில், ரஜினியின் சிறுவயது கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம், ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் தொடங்க இருக்கிறது. ஜெயிலில் இருந்து தப்பிக்க நினைக்கும் ஒரு கும்பலின் திட்டத்தை, அனுபவம் வாய்ந்த ஜெயிலர் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் கதை என்கிறார்கள்.

அதோடு, ரஜினி ஜெயிலராக நடிக்கவில்லை என்றும் அந்த கேரக்டரில் நடிப்பது சிவராஜ்குமார்தான் என்றும் ரஜினி கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் உள்ள கேரக்டரில் நடிப்பதாகவும் ஒரு தகவல் போய்க் கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in