ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங் எப்போது?

ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங் எப்போது?

ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியானது. சிவா இயக்கிய இந்தப் படத்தில், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இதையடுத்து ரஜினியின் அடுத்த படத்தையும் அந்த நிறுவனமே தயாரிக்கிறது. ரஜினியின் 169-வது படமாக உருவாகும் இதை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார்.

’ஜெயிலர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

கன்னட ஹீரோ சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜெயில் பின்னணியில் நடக்கும் கதையைக் கொண்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்க இருந்தது. இதற்காக அங்கு பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது இதன் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, சென்னை கிழக்கு கடற்கரையில் சாலையில் இந்த மாதம் தொடங்க இருந்தது. அடுத்த மாதத்துக்கு படப்பிடிப்புத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் சென்னையில் ’ஜெயிலர்’ ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

இதற்கிடையே, புதுடெல்லியில் நடைபெறும் 75 வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க ரஜினிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது. இதற்காக டெல்லி சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தி நடிகர் அனுபம் கெர் ஆகியோரைச் சந்தித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in