'அப்பா நீங்கள் தெய்வக் குழந்தை': நடிகர் ரஜினிக்கு மகள்கள் வாழ்த்து


'அப்பா நீங்கள் தெய்வக் குழந்தை': நடிகர் ரஜினிக்கு மகள்கள் வாழ்த்து

சினிமாவில் 47 வருடங்களை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அவருடைய மகள்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

’அபூர்வ ராகங்கள்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த், முதலில் வில்லனாக நடிக்கத் தொடங்கி ஹீரோவானவர். இந்திய சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழும் அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

அவர் சினிமாவில், 47 வருடங்களை இப்போது நிறைவு செய்துள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள், #47YearsOfRajinism என்ற ஹேஷ்டேக்கில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினிக்கு அவரின் மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். சவுந்தர்யா தெரிவித்துள்ள வாழ்த்தில், ’’47 வருட மேஜிக். அப்பா, நீங்கள் தெய்வக் குழந்தை. வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு நீங்கள். லவ் யூ தலைவா’’ என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் மூத்த மகள், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்தில், ’’47 ஆண்டுகள் ரஜினியிசம்... கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைத்தது இது. உங்கள் மகள் என்பதில் பெருமை கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரஜினி ரசிகர்கள் இந்தப் பதிவுகளை வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in