மகள் இயக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்!

மகள் இயக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.

தனுஷ் நடித்த `3' திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் ஜஸ்வர்யா. அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மிகப்பெரிய பிரபலமடைந்தன. அந்தப் படத்தை தொடர்ந்து கவுதம் கார்த்திக்- பிரியா ஆனந்த் நடிப்பில் `வை ராஜா வை' என்ற திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. இதன் பிறகு `சினிமா வீரன்' என்ற ஆவண திரைப்படத்தை இயக்கினார். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் பின் எந்த படத்தையும் இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லைகா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகும் படத்திற்கு 'லால் சலாம்' என பெயரிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in