கமலின் `விக்ரம்’ பட இசை விழாவில் டாப் ஹீரோக்கள்!

கமலின் `விக்ரம்’ பட இசை விழாவில் டாப் ஹீரோக்கள்!

கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்’ பட பாடல்கள் வெளியிட்டுள்ள டாப் ஹீரோக்கள் பங்கேற்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'விக்ரம்'. இதில், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்பட பலர் நடிக்கின்றனர். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கமல்ஹாசன், 2018-ம் ஆண்டு விஸ்வரூபம்-2 படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் நடிப்பில் வெளிவரும் படம் இது என்பதால், ரசிகர்கள் படத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில், கமல்ஹாசன் பாடியுள்ள 'பத்தல பத்தல' என்ற முதல் பாடல், சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடக்கிறது. இதில் டாப் ஹீரோக்களான ரஜினிகாந்த், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உட்பட பலர் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.