ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிப்பார் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

‘ஜெயிலர்’ படத்துக்குப் பிறகும் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

‘ஜெயிலர்’ படத்தை அடுத்து, ஏற்கெனவே கமிட்டான மற்றொரு படத்தை முடித்து கொடுத்துவிட்டு சினிமாவிலிருந்து ரிட்டயர்ட் ஆகலாம் என நினைத்தாராம் ரஜினிகாந்த். ஆனால், அவரின் உடல்நிலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், போதிய இடைவெளி கொடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்கலாம் என சொல்லிட்டார்களாம். அதே சமயம் தூசு, புழுதிச் சூழல்களில் மட்டும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதனால் இனிமேல் பெரும்பாலும் அவர் இன்டோர் ஷூட்டிங்கை மட்டுமே வைத்துக்கொள்வார் என்றும், கடினமான சண்டைக்காட்சிகளுக்கு குளோசப் தவிர்த்து, எல்லாக் காட்சிகளுக்கும் டூப் மட்டுமே பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். எனவே ‘ஜெயிலர்’ தவிர்த்து அடுத்து வரும் படங்களில் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் ரஜினி.

அமிதாப்பின் ‘சர்க்கார்’ படத்தைச் சுட்டிக்காட்டி, அதைப்போல் கேங்ஸ்டர் கதை ஒன்றை தயார் செய்யுமாறு ரஜினி சொல்லியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in