
போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டாலின் ரஜினிகாந்த் கையெழுத்திட்டு வாழ்த்தினார்.
மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதையற்ற தமிழ்நாடு என்ற தலைப்பிலான ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. 'போதையற்ற தமிழ்நாடு' முழக்கத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் தனது ஆதரவை வழங்கியுள்ளனர்.
இதனிடையே, போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து நடத்தும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசான். இதேபோல் போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டாலின் ரஜினிகாந்த் கையெழுத்திட்டு வாழ்த்தினார். மிகச்சிறந்த பணிக்கு எனது வாழ்த்துகள் என வழியனுப்பினார் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தெரிவித்துள்ளது.