விரலை நீட்டி ரசிகரை கண்டித்த ரஜினிகாந்த்: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு

விரலை நீட்டி ரசிகரை கண்டித்த ரஜினிகாந்த்
விரலை நீட்டி ரசிகரை கண்டித்த ரஜினிகாந்த்விரலை நீட்டி ரசிகரை கண்டித்த ரஜினிகாந்த்: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு

ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் விரலை நீட்டி, அங்கிருந்த ரசிகர் ஒருவரை கண்டித்த வீடியோ வைரலாகி வருகிறது.

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். தமன்னா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கான கதை விவாத உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்தன.

அந்த வேலைகளை முடித்த இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டார். ஆனால் ஒரு சில காரணங்களால் படம் இரண்டு வாரம் தள்ளிசென்றது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள பழைய உட்லண்ட்ஸ் ஹோட்டலில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. காவல் நிலைய செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

விரலை நீட்டி ரசிகரை கண்டித்த ரஜினிகாந்த்
விரலை நீட்டி ரசிகரை கண்டித்த ரஜினிகாந்த்

இந்த நிலையில், நான்காம் கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த், நேபாளம் செல்ல நேற்று சென்னை விமான நிலையம் சென்று இருந்தார். அவரை பார்த்தவுடன் ரசிகர்கள் கூட்டம் ஓடிச் சென்று புகைப்படம் எடுக்க விரைந்தனர். அப்போது, ரஜினிகாந்த் விரலை நீட்டி ரசிகர் ஒருவரை கண்டித்தார். ”ஒழுங்காக வேலையை பாருங்கள்” என அன்பாக ரசிகருக்கு அறிவுரை சொல்லி சென்றார். இதனால் அந்த இளைஞர் அதிர்ச்சியாகி சிலை போல் நின்றார். தொடர்ந்து அனைவருக்கும் வணக்கம் வைத்து வனங்கிவிட்டு சென்றுவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in