'மாமனிதன்’ படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த்

'மாமனிதன்’ படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த்
மாமனிதன் - விஜய் சேதுபதி, காயத்ரி

விஜய் சேதுபதி நடித்துள்ள ’மாமனிதன்’ படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'. காயத்ரி நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் மறைந்த கே.பி.ஏ.சி.லலிதா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், ஷாஜி சென், அனிகா, கஞ்சா கருப்பு, மானஸ்வி கொட்டாச்சி உட்பட பலர் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைத்துள்ளனர்.

மாமனிதன் - விஜய் சேதுபதி, சீனு ராமசாமி
மாமனிதன் - விஜய் சேதுபதி, சீனு ராமசாமி

இந்தப் படம் எப்போதோ முடிந்துவிட்டாலும் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தை ஸ்டூடியோ 9 நிறுவனம், மே 20-ம் தேதி படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் `மாமனிதன்' திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியுள்ளதாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில் அவர், ``ஜனவரியில், மாமனிதன் படம் பார்த்து பாராட்டி,நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள் பேசியதை வெளியே சொல்லவில்லை. அது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள். நீங்கள் படம் பார்த்ததே ஆசிகள். அதுபோதும் என்றேன். இன்று வெளியீட்டு தேதி, தானாகவே விற்பனை யாவும் முடிந்தது சார். நன்றி'' என்று கூறி ரஜினிகாந்த்தை டேக் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in