ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்!

ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்!

தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை மற்றவர்களுக்கு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு தலைவர்களும், நடிகர்களும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் ஆண்டதோறும் தீபாவளியொட்டு தனது ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாலை முதல் ரசிகர்கள் குவிந்திருந்தனர். இதையடுத்து ரஜினிகாந்த் தனது இல்லத்தின் வாசலில் நின்றவாறு ரசிகர்களை கையாசைத்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது ரசிகர்கள், தலைவா தலைவா என்று கோஷமிட்டனர். அவர்களின் வாழ்த்துக்களை ரஜினி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in