'தளபதி'க்குப் பிறகு மீண்டும் இணையும் ரஜினி-மணிரத்னம் கூட்டணி!

'தளபதி'க்குப் பிறகு மீண்டும் இணையும் ரஜினி-மணிரத்னம் கூட்டணி!

'தளபதி' படத்தை தொடர்ந்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினியும் மணிரத்னமும் இணையப் போகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த 30ம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் 'பொன்னியின் செல்வன்' கதையில் இடம்பெற்றுள்ள பெரிய பழு வேட்டரையர் வேடத்தில் நடிக்க தான் விருப்பம் தெரிவித்தாக சொன்னார். அதைகேட்ட மணிரத்னம், அப்படி ஒரு வேடத்தில் ரஜினியை நடிக்க வைத்து அவரது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாக நான் விரும்பவில்லை என்பதற்காகவே அந்த வேடத்தில் அவரை நடிக்க வைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

அதையடுத்து மணிரத்னத்தின் 'தளபதி' படத்தில் நடித்தபோது நடைபெற்ற சில சம்பவங்களையும் அந்த மேடையில் பகிர்ந்து கொண்டார் ரஜினி காந்த்.

இந்த நிலையில் தற்போது ரஜினிக்கு மணிரத்னம் ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், அந்த கதை ரஜினிக்கும் பிடித்து விட்டதால் நடிக்க தயாராக இருப்பதாகவும் புதிய ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் 'தளபதி' படத்தை தொடர்ந்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினியும் மணிரத்னமும் இணையப் போகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in