
ராஜஸ்தானில் 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் அவரது காரை சுற்றி வளைத்தார்கள். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்துவரும் 'ஜெயிலர்' படத்தின் ஷூட்டிங் தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது. ராஜஸ்தானில் படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் வந்தபோது, அவர் காரின் உள்ளே உட்கார்ந்திருக்க, அவரை பார்த்த ரசிகர்கள் தன்னுடைய மொபைல் போனில் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றனர்.
அதில் ஒரு ரசிகர் நான் மதுரையில் இருந்து வந்திருப்பதாக சொன்னார். உடனே அவருக்கு ரஜினி கையசைக்க, இன்னொருவர் கண்ணாடியை கீழே இறக்குமாறு கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற ரஜினி, கண்ணாடியை கீழே இறக்கினார். அதன் பின்னர் ரஜினியின் கார் புறப்பட்டுச் சென்றது.