’தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன், எளியவன் மனசுல பிட் ஆனவன்’ - வெளியானது ஜெயிலர் 2வது சிங்கிள்!

’வைரலாகும் தலைவரின் அலப்பறை’ பட்டையை கிளப்பும்இரண்டாவது சிங்கிள்
ஜெயிலர் படம்
ஜெயிலர் படம் ஜெயிலர் பட போஸ்டர்

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினி காந்த் நடிப்பில், நெல்சன் தீலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. கடைசியாக வெளியான ’அண்ணாத்த’ உட்பட சில படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யாத நிலையில், இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக கடந்த 6ம் தேதி வெளியான காவாலா பாடல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மற்றொரு சிங்கிள் ஹூக்கும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ரஜினியின் குரலில் ’இங்க நான்தான் கிங்கு’ என்ற வரியுடன் தொடங்கும் இந்த பாடல் மாஸாக அமைந்துள்ளது. இந்த பாடலை சூப்பர் சுப்பு என்பவர் எழுத, அனிருத் பாடியுள்ளார். தலைவர் களத்தில் சூப்பர் ஸ்டாருடா, தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன் என வரிகளில் ரசிகர்களுக்கு மாஸ் விருந்து படைத்துள்ளது இந்த பாடல்.

ஆகஸ்டு 10ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், சிவராஜ்குமார், தமன்னா, ஜாக்கி ஷெராப், யோகி பாபு, சுனில் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in