போயஸ் கார்டனில் திரண்ட ரசிகர்கள்... கையசைத்து தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

உலக முழுவதும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த தீபாவளி வாழ்த்து கூறினார்.

 நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைகளை களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த வீட்டின் முன்பு அவரை காண ரசிகர்கள் வருவது வாடிக்கை. அந்த வகையில் இந்த ஆண்டும் ரஜினி வீட்டின் முன்பு பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், வெள்ளை சட்டையுடன் சும்மா கெத்த வெளி வந்த ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்து கும்பிட்டு கையசைத்து, ப்ளைன் கிஸ் கொடுத்து ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in