பிறந்தநாளில் பேரன்களுடன் விளையாடி மகிழ்ந்த ரஜினிகாந்த்!

பிறந்தநாளில் பேரன்களுடன் விளையாடி மகிழ்ந்த ரஜினிகாந்த்!

தனது பிறந்தநாளில் நடிகர் ரஜினிகாந்த் தனது பேரன்களுடன் விளையாடி மகிழும் புகைப்படம் சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்தார். பிறந்த நாளையொட்டி போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் அவரது ரசிகர்கள் குவிந்தனர். ரஜினி வீட்டில் இல்லாததால் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், தனது கணவருக்கு வாழ்த்துக் கூறி வந்த ரசிகர்களிடம் ரஜினிகாந்த் வீட்டில் இல்லை. உங்களது அன்பை அவரிடம் தெரிவிக்கிறேன். மழையால் நிற்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து அவர்கள் அங்கேயே கேக் வெட்டி ரஜினிக்கு பிறந்தநாள் கொண்டாடினர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் குழந்தைகளுடன் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். இந்த புகைப்படத்தை ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரஜினி தனது பேரக் குழந்தைகளுடன் விளையாடும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in