லெஜண்ட் சரவணனுடன் ரஜினி: பரபரப்பு கிளப்பிய ட்வீட்!

லெஜண்ட் சரவணனுடன் ரஜினி: பரபரப்பு கிளப்பிய ட்வீட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தான் இருக்கும் படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் நடிகர் லெஜண்ட் சரவணன்.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், ஹீரோவாக நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்றது.

இந்த நிலையில் இன்று லெஜண்ட் சரவணன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ சூப்பர் ஸ்டார் உடனான தருணங்கள்’ என தெரிவித்து ரஜினியுடன் தான் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

‘தி லெஜண்ட்’ திரைப்படம் வெளியான சமயத்தில், “எனது நடிப்பில் ரஜினி காந்தின் தாக்கம் இருந்தது. அதனை தவிர்க்க முடியவில்லை ” என சரவணன் தெரிவித்திருந்தார்.

‘தி லெஜண்ட்’ படத்தை இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஊர்வசி ரவுதலா, பிரபு, விஜயகுமார், நாசர், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். நடிகர் விவேக் நடித்த கடைசி படம் இது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in