கையில் குழந்தையுடன் சௌந்தர்யா... கண்ணில் பூரிப்புடன் ரஜினிகாந்த்: வைரல் புகைப்படம்

கையில் குழந்தையுடன் சௌந்தர்யா... கண்ணில் பூரிப்புடன் ரஜினிகாந்த்: வைரல் புகைப்படம்

தனது மகள் சௌந்தர்யாவின் கையில் உள்ள குழந்தையை ஆர்வத்துடன் ரஜினிகாந்த் எட்டிப்பார்க்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “நேற்று எனது பிறந்தநாளுக்கு நேரம் ஒதுக்கி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.. . கடவுள்கள் இந்த ஆண்டு எனக்கு சிறந்த பரிசை அளித்துள்ளனர்,

இந்த அற்புதமான குழந்தை என் வீர் பாப்பா. கடவுளின் ஆசி எப்போதும் எனக்கு உள்ளது, வாழ்க்கை ஒரு உண்மையான ஆசீர்வாதம்” என தெரிவித்து தனது கையில் குழந்தையும், பின்னால் ரஜினியும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

முதல் திருமண விவாகரத்துக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் 2019ம் ஆண்டு விசாகன் வணங்காமுடி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அஸ்வின் - சவுந்தர்யாவின் மகனான வேத், சௌந்தர்யாவிடம் வளர்ந்து வருகிறார். தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த்-விசாகன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயர் சூட்டியுள்ளதாக சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in