`பீஸ்ட்' பார்த்து மவுனமாக சென்ற ரஜினி!

`பீஸ்ட்' பார்த்து மவுனமாக சென்ற ரஜினி!

சன் டிவி அலுவலகத்தில் நடிகர் ரஜினிக்கு, `பீஸ்ட்' படம் பிரத்யேகமாக போட்டுக் காட்டப்பட்டது. இந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினி எந்த பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டாராம்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள `பீஸ்ட்' படம் நேற்று வெளியானது. இந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் பல இடங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளில் வரும் 17-ம் தேதி வரை ஹவுஸ்புல் ஆகி விட்டதாம். இந்த படம் சில ரசிகர்களுக்கு திருப்தியை தரவில்லையாம். கலவையான விமர்சனங்களையே பீஸ்ட் பெற்றுள்ளதாம்.

இந்நிலையில், 'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 169' படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இதனிடையே, ரஜினியை சன் டிவி அலுவலகத்துக்கு வரச் சொல்லி `பீஸ்ட்' படத்தை போட்டுக் காட்டினார்களாம். படத்தை பார்த்தவர் தலையை ஆட்டிட்டு எதுவுமே சொல்லாமல் கிளம்பிவிட்டாராம்.

Related Stories

No stories found.